இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை பரீட்சை: வயது வரம்பில் திருத்தம்

 இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை பரீட்சை:  வயது வரம்பில் திருத்தம்



இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026 தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்:

  • விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு: பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 2026 செப்டம்பர் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

  • வயது வரம்பு திருத்தம்: 2026.08.31 ஆம் திகதியன்று விண்ணப்பதாரரின் வயது 22 இற்குக் குறையாமலும் 35 இற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். (பிறந்த திகதி 1991.08.31 தொடக்கம் 2004.08.31 வரையான காலப்பகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும்).

  • அரசு ஊழியர்களுக்கான நிபந்தனை: அரச அல்லது மாகாண அரச சேவையில் உள்ளவர்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். அவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்றுத் தண்டனைகளும் விதிக்கப்பட்டிருக்கக் கூடாது.

2026 ஜூலை 31 ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 2,500 கொண்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஏனைய அனைத்து நிபந்தனைகளும் மாற்றமின்றி செல்லுபடியாகும் என அரச சேவை ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அமைச்சு அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்கள்

Post a Comment

Previous Post Next Post