இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III ஆட்சேர்ப்பு – 2026: 25 வெற்றிடங்களுக்கான அறிவிப்பு
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை வெளிநாட்டுச் சேவையின் (SLFS) தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவை ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது
முக்கிய விபரங்கள் சுருக்கமாக
| விபரம் | விவரக்குறிப்பு |
| பதவி | இலங்கை வெளிநாட்டுச் சேவை (SLFS) – தரம் III |
| வெற்றிடங்களின் எண்ணிக்கை | 25 |
| விண்ணப்பக் காலம் | 2026 செப்டம்பர் 07 (முற்பகல் 09:00) முதல் 2026 ஒக்டோபர் 06 (பிற்பகல் 09:00) வரை |
| விண்ணப்பிக்கும் முறை | |
| பரீட்சைக் கட்டணம் | ரூபா 1,200/- |
| பரீட்சை நடைபெறும் மாதம் | 2026 நவம்பர் |
| சம்பள அளவுத்திட்டம் | ரூபா 82,150 – 10x2,400 – 8x2,940 – 17x3,900 – ரூபா 195,970 (SL-1-2025) |
தகைமை நிபந்தனைகள்
கல்வித் தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட அல்லது இலங்கை பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அல்லது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 25A பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெறப்பட்ட பட்டப்படிப்பு
. வயதெல்லை (திறந்த விண்ணப்பதாரிகள்): 2026.10.06 ஆம் திகதியன்று 22 வயதை அடைந்தவராகவும் 28 வயதை எட்டாதவராகவும் இருத்தல் வேண்டும் (1998.10.06 இற்குப் பின்னரும் 2004.10.06 இற்கு முன்னரும் அல்லது அத்திகதிகளில் பிறந்தவர்கள்)
. வயதெல்லை (அரச ஊழியர்கள்): அரச அல்லது மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் 2026.10.06 ஆம் திகதியன்று 35 வயதை எட்டாதவராகவும் (1991.10.06 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள்) கடந்த 5 வருடங்களில் திருப்திகரமான சேவையைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்
. குடியுரிமை மற்றும் பொதுவான நிபந்தனைகள்: இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும் (இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்)
. மதகுருமார்கள் எவரும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் . ஒரு விண்ணப்பதாரி இப்பரீட்சைக்கு அதிகபட்சமாக மூன்று தடவைகள் மட்டுமே தோற்ற முடியும் .
எழுத்துப் பரீட்சை விபரம்
எழுத்துப் பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்படும்
| இல. | பாடம் | கால அளவு | மொத்தப் புள்ளிகள் | வெட்டுப்புள்ளி (Pass Marks) |
| 01 | பொது வினாத்தாள் (General Paper) | 3 மணித்தியாலங்கள் | 100 | 40 |
| 02 | உலக விவகாரங்கள் I (World Affairs I) | 3 மணித்தியாலங்கள் | 100 | 40 |
| 03 | உலக விவகாரங்கள் II (World Affairs II) | 3 மணித்தியாலங்கள் | 100 | 40 |
| 04 | கட்டுரை (Essay) | 3 மணித்தியாலங்கள் | 100 | 40 |
| 05 | சுருக்கெழுத்து (Précis) | 30 நிமிடங்கள் | 50 | 25 |
| 06 | பல்தேர்வு வினாத்தாள் – MCQ (நுண்ணறிவு + பொது அறிவும் நடப்பு விவகாரங்களும்) | 2 மணி 30 நிமிடங்கள் | 150 | 75 |
| 07 | மொழித் தேர்ச்சி (சிங்களம்/தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகளுக்கு ஆங்கிலப் பாடம்; ஆங்கில மொழிமூல விண்ணப்பதாரிகளுக்கு சிங்களம் அல்லது தமிழ் பாடம்) | 3 மணித்தியாலங்கள் | 100 | 40 |
தகைமை மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை (100 புள்ளிகள்)
எழுத்துப் பரீட்சையின் 7 பாடங்களிலும் சித்தியடைந்து, மொத்தமாக குறைந்தபட்சம் 300 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறும் விண்ணப்பதாரிகளில் இருந்து, வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் போன்று அதிகபட்சமாக 5 மடங்குக்கு உட்பட்ட எண்ணிக்கையினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்
மேலதிக கல்வித் தகைமைகள் (பட்டத்தின் வகுப்பு/தரம்): அதிகபட்சம் 20 புள்ளிகள்
பட்டப்பின்படிப்பு மற்றும் தொழில்சார் தகைமைகள்: அதிகபட்சம் 15 புள்ளிகள்
ஆங்கில மொழித் தேர்ச்சி: அதிகபட்சம் 15 புள்ளிகள்
வெளிநாட்டு மொழித் தேர்ச்சி (அரபு, சீனம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, இத்தாலியன், ஜப்பானிய மொழி, கொரிய மொழி, ரஷ்யன், ஸ்பானிஷ்): அதிகபட்சம் 10 புள்ளிகள்
கணினித் திறன்: அதிகபட்சம் 05 புள்ளிகள்
அரசகரும மொழித் தேர்ச்சி: அதிகபட்சம் 10 புள்ளிகள்
ஆளுமை மற்றும் தொடர்பாடல் திறன்: அதிகபட்சம் 25 புள்ளிகள்
- விபரங்கள் - ஆங்கிலம்
- விபரங்கள் - தமிழில்
விண்ணப்பிக்கும் முறை
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, "Our Services" > "Online Applications - Recruitment/E.B. Exams" என்ற பகுதியைத் தெரிவு செய்யவும்
. இணையவழி விண்ணப்பப் படிவத்தை ஆங்கில மொழியில் முழுமையாகப் பூர்த்தி செய்யவும்
. பரீட்சைக் கட்டணமான ரூபா 1,200/- ஐ கடனட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card), இணைய வங்கி சேவை / BOC Flex App அல்லது இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் செலுத்தலாம்
. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் பிரதி மற்றும் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு ஆகியவற்றை எதிர்காலத் தேவைகளுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்
. அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பப் பிரதியைத் திணைக்களத் தலைவரூடாகச் சமர்ப்பிக்க வேண்டும் .
