தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு




இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் (Cut-off Marks) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகத் தமது பாடசாலைகளுக்குரிய பெறுபேற்று ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழிமூலத்திற்கான முக்கிய மாவட்டங்களின் வெட்டுப்புள்ளிகள் விவரம்:

  • கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை: 135

  • யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாறை, பதுளை, மொனறாகலை: 133

  • நுவரெலியா, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு: 132

  • மன்னார், திருகோணமலை, புத்தளம்: 131

  • அநுராதபுரம், பொலன்னறுவை: 130



மாவட்ட வெட்டுப்புள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று 'QUALIFIED' எனத் தகுதிபெற்றுள்ள மாணவர்கள், பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் புலமைப்பரிசில் உதவித்தொகை பெறுவதற்கும் தகுதியுடையவர்களாவர். அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விதிமுறைகளின்படி உதவிப்பணங்கள் வழங்கப்படும்.

பெறுபேறுகள் தொடர்பில் திருப்தியடையாத மாணவர்களுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியில் (Online) சமர்ப்பிப்பதற்கான திகதிகள் மற்றும் வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post