வடக்கு மாகாண சபையில் 20 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்கள்: விண்ணப்பங்கள் கோரல்!
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்குரிய 20 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, திறந்த போட்டிப்பரீட்சை - 2026க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
இப்போட்டிப் பரீட்சையானது 2026 ஒக்ரோபர் மாதமளவில் யாழ்ப்பாணம் (01), வவுனியா (02) மற்றும் கிளிநொச்சி (03) ஆகிய பரீட்சை மையங்களில் நடாத்தப்படவுள்ளது
முக்கிய விவரங்கள் & சேவை நிபந்தனைகள்
பதவி: கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III (நிரந்தரமானது மற்றும் ஓய்வூதிய உரித்துடையது)
. சம்பளத் தொகுதி: MN 3-2025 திட்டத்தின் கீழ் ரூபா 52,250 – 10x800 – 11x1,190 – 10x1,320 – 10x1,350 – 100,040/-
. வயது எல்லை: 18 வயதிற்கு குறையாதவராகவும் 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
. வதிவிடத் தகைமை: விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் தொடர்ச்சியாக 06 ஆண்டுகளில் ஆகக்குறைந்தது 03 ஆண்டுகள் வடக்கு மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரர்/பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தொடர்ச்சியாக 05 ஆண்டுகள் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருக்க வேண்டும்
.
கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள்
க.பொ.த (சா/த): ஒரே அமர்வில் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம், கணிதம் மற்றும் வேறு இரு பாடங்களில் திறமைச் சித்தி (Credit) உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்
. க.பொ.த (உ/த): ஒரே அமர்வில் பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிக புள்ளிவிபரவியல் அல்லது வணிகக் கல்வி ஆகிய பாடங்களில் ஒன்றாவது உள்ளடங்கலாக 03 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்
. தொழில்சார் தகைமை (ஏதேனும் ஒன்று):
NICD பொல்கொல்ல நிறுவனத்தின் டிப்ளோமா அல்லது வடக்கு மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தின் உயர் மட்டப் பாடநெறி சித்தி
. AAT நிறுவனத்தின் இறுதி மட்டம் (Final Stage) சித்தி
. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் கணக்கியல்/முகாமைத்துவ டிப்ளோமா
. இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் (CASL) இடைநிலைப் பரீட்சை சித்தி
. HNDA (04 வருடங்கள்) அல்லது HNDBA (03 வருடங்கள்) டிப்ளோமா சித்தி
.
பரீட்சை முறைமை
இப்பரீட்சை தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களில் நடாத்தப்படும்
பொது நுண்ணறிவுத் திறன்: தர்க்கிக்கும் திறன், பகுத்தாய்வு மற்றும் தீர்மானமெடுக்கும் திறனை சோதிக்கும் 50 வினாக்கள் (01 மணித்தியாலம்)
. பொது அறிவு: அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விடயங்கள் மற்றும் கூட்டுறவுத் தத்துவம்/வணிக அறிவு சார்ந்த 50 வினாக்கள் (01 மணித்தியாலம்)
.
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40% புள்ளிகளைப் பெற வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
www.np.gov.lkஎன்ற வடக்கு மாகாண சபையின் இணையத்தளத்தில் விண்ணப்பப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். பரீட்சைக் கட்டணமான ரூபா 500/- ஐ வடக்கு மாகாணத்தில் உள்ள ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தில் "செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்" என்ற பெயரில் செலுத்தி, பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும்
. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை 2026.09.18 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்
: செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
இல. 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
. கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் "NP/07/10/01/235" எனக் குறிப்பிடப்பட வேண்டும்
